விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சமூகவலைதளங்களில் விஜய் பற்றிய ஒவ்வொரு விசயத்தையும் கொண்டாடுகிறார்கள். அவரை பற்றி மற்ற பிரபலங்கள் யாராவது நேர்காணலில் சொன்னால் கூட அதையும்கொண்டாடுகிறார்கள்.
அண்மையில் இயக்குனர் பேரரசு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இதில் அவர் 10 ஆயிரம் உதவி செய்துட்டு 1 லட்சத்துக்கு விளம்பரம் தேடும் இந்த உலகத்தில் விளம்பரமே இல்லாமல் பிறருக்கு நிறைய உதவிகள் செய்து வருபவர் விஜய் சார். அது தான் அவரின் பக்குவம் என பெருமையாக கூறியுள்ளார்.