Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் பிரபல நடிகர்! பெரும் எதிர்பார்ப்புடன்

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது விஜய் 63 படத்தில் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். ரசிகர்களை அவர் சந்திக்கும் புகைப்படங்கள் வந்தபடி இருக்கின்றன. இந்த படமும் தீபாவளிக்கு வரபோவது மகிழ்ச்சியான விஷயம் தான்.

விஜய்க்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். மற்ற மொழிகளில் இவரின் படங்களை ரீமேக் செய்து நடிப்பவர்களும் உண்டு. அந்த வகையில் அட்லீ விஜய் கூட்டணியில் வந்த தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார்கள். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் பிரபல நடிகர் ரவி தேஜா விஜய்யின் ரோலில் நடிக்கவுள்ளாராம். தசரா ஸ்பெஷலாக வெளியாகும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 15 ல் தொடங்கவுள்ளதாம்.

திரையில் இப்படத்தை காண ரவிதேஜா மிகவும் ஆர்வமுடன் இருக்கிறாராம். இதில் நடிகை கேத்ரீன் தெரஸா நடித்துள்ளார். இப்படத்தை லக்‌ஷ்மி மஞ்சு, ஹன்சிகா என பலரும் புகழ்ந்துள்ளனர்.