Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-மோகன் ராஜா படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது?

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் என ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைக்கிறார்.

விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் மோகன்ராஜாவுடன் தான் என உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கத்தி படத்தில் விஜய்க்கு இசையமைத்த அனிருத் தான் மீண்டும் விஜய்64 மூலம் மீண்டும் தளபதியுடன் கூட்டணி சேரவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.