Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக நீதி பாடலாக உருவாகியுள்ள நளினிகாந்தி பட பாடல்! பாடலாசிரியர் இயக்குனர் பொன் சுகிர் அவர்களுடன் கலந்துரையாடல்

பொன் சுகிர்

அமேரிக்காவில் திரைபடம் பற்றி பயின்று, அங்கே ஆங்கிலத்தில் படம் பண்ணும் ஒரு

படைப்பாளி. கர்நாடக சங்கீதம் மீது கொண்ட ஆவர்வம் காரணமாக அவர் கீர்தனைகள்

எழுதுவதை வழக்கமாக கொண்டவர். இவர் எழுதிய உருப்படிகள் பல பிரசித்தி பெற்ற

பாடகர்களால் மேடைகளில் பாடப்படுவது.

பாடலாசிரியர் இயக்குனர் பொன் சுகிர் அவர்களுடன் கலந்துரையாடல்

இந்தப் பாட்டின் உருவான கதை தான் என்ன?

1.) நான் இந்தப்பாடலை இந்த இராகத்தில் அமைக்கவே எழுதினேன். இப்படியான சமூக

நீதிப்பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட வேண்டும் என எண்ணினேன். இதைப் பல பிரபல

கர்நாடக சங்கீத பாடகர்களிடம் கொடுத்தேன். ஆனால் யாரும் இதைப்பாட முன்

வரவில்லை. இந்தப்பாடல் கிடைத்தபின் நண்பரகளாக இருந்த பலர் என்னுடன் பேசுவதை

தவிர்த்தனர்.

அப்போ எப்படித்தான் இந்தப்பாடல் உருவானது?

2.) இந்தப்பாடலை நான் இயக்கியுள்ள நளினகாந்தி படத்தில் இடம்பெற வைக்கலாமென

முடிவு கொண்டேன். அதற்காக சின்மயியை பாட வைக்கலாமென கூற பலர் கடும் எதிர்ப்பு

தெரிவித்தனர். சின்மயிடம் கேட்ட பொழுது அவரும் எந்த பதிலும் தரவில்லை. அதன்

பின் அவர் அம்மாவிடம் பேசிய போது அவரோ தன் மகளை தயவு செய்து விட்டு விடுங்கள்

என மிகவும் கடுமையாக பேசினார்.

கடைசியாக யார் தான் பாடினார்?

2.) லால்குடி ஜெயராமனின் மாணவியான ஷ்ரேயா தேவ்நாத் அவர்கள் இதை மிகுந்த

ஆரவத்துடன் பாடி ஒப்பேற்றினார். அவருக்கு மிகுந்த நன்றி.

இதற்கு இசையமைத்தது?

3.) இந்த பாட்டிற்கு மிக அருமையாக ஜூட் ஆரோகணம் இசையமைத்து

மெருகூட்டியுள்ளார். ஜூட் தான் எனது நளினகாந்தி படத்தின் முழு இசையையும்

அமைத்திருக்கின்றார்.

உங்கள் படத்தைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்

4.) நளினகாந்தி படம் ஒரு பிரபல வைத்தியர் மனநிலை பாதிக்க படும் வேளையில் அவரை

பராமரிக்க வந்த பெண் படும் இன்னல்களையும் அவளுக்க சமுதாயத்தால் ஏற்படும்

தாக்கங்களையும் சித்தரிக்கும் ஒரு திரை ஓவியம். இதில் இந்திய தேசிய விருது

பெற்ற நடிகர், கவிஞர் வை ஐ ச ஜெயபாலன் அவர்களுடன் கஸ்தூரி, புவிஷா, ஷார்மிலா,

ஸலீமா, என பலர் நடித்திருக்கின்றனர். நளினகாந்தி என்பது ஒரு கர்நாடக

இராகத்தின் பெயர். இந்த இராகம் மனநிலை பாதிக்கபட்டவர்களை குனப்படுத்தக்கூடிய

சக்தி வாய்ந்தது. இந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் விரைவில் வரும்.

இந்தப்பாடலைப்பற்றி?

5.) இந்தப்பாடலை கச்சேரிகளில் பாடுமாறு நான் எல்லா கர்நாடக பாடகர்களையும்

வேண்டுகிறேன். அவர்களை மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் பாடுங்கள். சமூகத்தில்

இந்தப்பாடல் மாற்றம் ஏற்றபடுத்த உதவுங்கள்.

வேறு?

6.) இந்தப்பாட்டுக்கேற்ற காணோளியையும் எவர் வேண்டுமானாலும் செய்யலாம். அதை

எங்களுக்கு அனுப்பினால் pon.suhir@gmail.com நாம் அதை நமது இனையத்தளத்தில்

பிரசுரிப்போம்.