Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் எதிர்பாராத சூப்பர் ஸ்பெஷல்!

தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது. வழக்கறிஞராக அமிதான் பச்சன் நடித்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். ஆனால் வினோத் ரசிகர்களுக்காக சில விசயங்களை சேர்த்துள்ளாராம்.

இப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுதுவதாக தகவல் வெளியானது. தற்போது புது ஸ்பெஷலாக அஜித், வித்யா பாலனுக்கும் இடையில் காதல் இருப்பது போல ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள யுவன் சென்னை வந்ததும் பா.விஜய் பாடலுக்கு இசையமைப்பாராம்.