Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை நிச்சயதார்த்தம்! விஷாலின் அயோக்யா படம் பற்றி இன்று வந்துள்ள அதிர்ச்சி தகவல்

நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்யா படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தள்ளிப்போவதாக அறிவித்துள்ளனர்.

படத்தில் இன்னும் ஒரு பாடல் ஷூட்டிங் எடுக்கப்படாமல் உள்ளது. அதில் சன்னி லியோன் ஆடுகிறார் என கூறப்பட்டது, ஆனால் அதன்பின்னர் ஷ்ரத்தா தாஸ் ஆடுகிறார் என கூறினார். தற்போது அவரும் விலகிவிட்டதால் சனா கானை வைத்து இந்த பாடலை படமாக்கவுள்ளனர்.

ஆனால் தற்போது அதற்கும் சிக்கல் வந்துள்ளது. நாளை விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடக்கிறது. அதனால் பாடல் ஷூட்டிங்கை பிறகு வைத்துக்கொள்ளலாம் என தள்ளிவைத்துள்ளனர்.

அதனால் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 19ம் தேதி ரிலீஸ் ஆகாது எனவும், மே 10ம் தேதிக்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.