Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி படத்தை பார்த்து மிரண்டுபோன முன்னணி பாலிவுட் இயக்குனர்

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தினை பார்த்த முன்னணி பாலிவுட் இயக்குனர் படத்தினை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப் தான அது. அவர் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் இயக்குனர் தியாகராஜ குமாரராஜா சூப்பர் டிலக்ஸ் படத்தை போட்டு காட்டியுள்ளார். அதன் பிறகு தான் அனுராக் ட்விட்டரில் படத்தை பார்த்து மிரண்டுவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அதை மிஸ் செய்ததற்கு இப்போது வருந்துகிறேன் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.