Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் படத்திலிருந்து விலகிய நடிகை! புதிதாக சேர்ந்த நடிகை

இப்போதெல்லாம் சினிமாவில் பயோகிராஃபி என சொல்லப்படும் வாழ்க்கை வரலாறு படங்களின் காலம். பல இயக்குனர்கள் சாதனை செய்த பிரபலங்களில் வாழ்க்கையை படமாக்கி வருகின்றனர்.

தோனி, சச்சின் டெண்டுல்கர் என சினிமாவை தவிர்த்து மற்ற பிரபலங்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கையை அமேல் குப்தா படமாக இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் சாய்னாவாக நடித்து வந்த ஷர்த்தா கபூர் டெங்குகாய்ச்சலால் படத்திற்கு ஓய்வு கொடுத்து பின் நடிக்க வந்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து விலகினார்.

இதனால் அவருக்கு பதிலாக நடிகை பர்னிதி சோப்ராவை நடிக்க வைக்கிறார்களாம். இந்த வருட இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.