Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் மீண்டும் ரீஎண்டிரி கொடுக்கும் பிரபல நடிகை! சூப்பர் ஹீரோவுடன் கூட்டணி

நடிகை சங்கீதா பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன் படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தில் அவர் கஞ்சா வியாபாரி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததை மறக்க முடியாது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வந்தார். பிரபல பாடகர் கிருஷ் என்பவரை அவர் 2009 ல் திருமணம் செய்துகொண்டார்.

டிவி சானலில் ஜோடி நம்பர் 1 சீசன் 1ன் நடுவராக இருந்தார். திருமணம் முடிந்தும் அவர் படங்களில் நடித்து வந்தவர் கடந்த இரண்டு வருடங்களாக நடிக்கவில்லை.

கடைசியாக விக்ரம் பிரபு நடித்த நெருப்புடா படத்தில் நடித்தவர் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.