Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிப் லாக் காட்சி உள்ள ஹாட்டான டீசர் செய்த சாதனை! வைரல் டிரெண்டிங் - ரசிகர்கள் குஷி

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் அத்தனை ரசிகர்கள், ரசிகைகளின் மனங்களை கொள்ளை கொண்டவர் விஜய் தேவரகொண்டா. அவரின் படங்கள் அடுத்தடுத்து ஹிட் வரிசையில் அமைந்து வருகின்றன.

கடந்த முறை கீதா கோவிந்தம் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது. இங்கேம் காவாலே பாடலை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை. இப்படத்தில் நடித்த விஜய், ராஷ்மிகா ஜோடி டியர் கம்ரேட் படத்தில் நடித்துள்ளார்கள்.

அடுத்ததாக வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் 4 மொழிகளில் நேற்று வெளியானது. வழக்கம் போல இப்படத்தில் லிப் லாக் காட்சிகள், நெருக்கங்கள் இருக்கும் என தெரிகிறது.

டீசரும் இதை சொல்லிவிட்டது. இந்நிலையில் நேற்றுவந்த இந்த டீசர் 5.5 மில்லியன் பார்வைகளை 200K லைக்குகளையும் பெற்று 5 மாநிலங்களில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.