Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

17 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை! அதிலும் விஜய் சேதுபதி, திரிஷா பட இயக்குனருக்கு தான்

சினிமா கலைஞர்களுக்கு விருது என்பது தங்கள் உழைப்பிற்கு கிடைக்கும் பெரும் கவுரவம் தான். அறிமுக இயக்குனர்களுக்கு விருது என்பது அரிதான ஒன்று. தற்போது அவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெலுங்கு நடிகர் மாருதிராவின் மகன் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தன் முதல் படத்தை இயக்கியபோது விபத்தால் மரணமடைந்தார். இதனால் அவரின் நினைவாக கடந்த 1998 முதல் அறிமுக இயக்குனருக்கு விருது கொடுக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் தமிழில் 2002 ல் வெளியான குட்டி படத்தை இயக்கிய ஜானகி விஸ்வ நாதனுக்கு இவ்விருது கொடுக்கப்பட்டது. இப்படத்தில் கௌசல்யா, நாடர், ஈஸ்வரி ராவ், விவேக் என பலர் நடித்திருந்தனர்.

தற்போது 17 வருடங்களுக்கு பிறகு திரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 பட இயக்குனர் பிரேம் குமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.