Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூரின் அடுத்த பிரம்மாண்டம்! ரசிகர்களுக்கு மெகா விருந்து

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதனையடுத்தும் அடுத்த படத்தில் அஜித் இதே கூட்டணியில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் போனி கபூர் அடுத்ததாக ஹிந்தியில் ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த Badhaai Ho படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம்.

கடந்த 2018 ல் டாப் 13 ஹிந்தி படங்களில் ஒன்றாக வந்த இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் ரீமேக் செய்கிறாராம்.

இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, சான்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் ஆகியோர் நடித்திருந்தனர்.