Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர்கள் வரும் விருது விழா முதல் வரிசை டிக்கெட் விலை இவ்வளவா? அதிர்ச்சியான ரசிகர்கள்

விருது விழாக்கள் என்றால் அனைத்து டாப் நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் வருவார்கள் என்பதால் அவர்களை பார்ப்பதற்காகவே பெரிய ரசிகர்கள் கூட்டம் வரும்.

இதை பயன்படுத்தி டிக்கெட் விலையை கண்ணாபின்னாவென ஏற்றி விழா நடத்துபவர்கள் கல்லா கட்டிவிடுவார்கள்.

இந்த வாரம் சனி கிழமை மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்குபெறும் பிலிம்பேர் விருது விழா நடக்கவுள்ளது. அதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை 10 ஆயிரம் ருபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் வரிசை டிக்கெட் விலையை கேட்டால் உங்களுக்கு நிச்சயம் தலைசுற்றும். முதல் வரிசையில் அமர்ந்து பார்க்கவேண்டும் என்றால் 3 லட்சம் ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டுமாம்.