Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாறமாட்டீங்களே? ஐரா இயக்குனருக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்

நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பவானி என்கிற ரோல் முழுமையாக பிளாக் அண்ட் வைட்டில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

இதன் டீஸர் மற்றும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆனார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சர்ஜுன் அளித்துள்ள பேட்டியில் நயன்தாரா போட்ட கண்டிஷன் பற்றி பேசியுள்ளார்.

முதலில் நயன்தாரா ஒரே ஒரு ரோலில் தான் நடிக்கவிருந்தார், பின்னர் பவானி என்கிற ரோலிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். கறுப்பு-வெள்ளையில் தான் எடுக்கப்போகிறேன் என கூறினேன்.

"இந்தக் கறுப்பு - வெள்ளை கான்செப்ட்ல நீங்க உறுதியா இருக்கீங்களா, மாறமாட்டீங்களே? அப்பதான் நான் பவானி கேரக்டர் பண்ணுவேன்" என ஒன்றிற்கு பலமுறை இயக்குனரிடம் கேட்டு தான் பவானி ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் நயன்தாரா.