Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை அறிந்தால், தடம் பட புகழ் அருண் விஜய்யின் மிரட்டலான வீடியோ! ஷாக்கிங் மொமண்ட்

அருண் விஜய் சினிமா பின்னணினியிலிருந்து வந்திருந்தாலும் அவர் தனக்கான திறமையை வெளிக்காட்ட தவறுவதில்லை. அதனால் தான் படங்களில் அவரின் நடிப்பு முக்கியமானதாக அமைந்துவிடுகிறது.

என்னை அறிந்தால் படத்தில் நடித்த போது ஹீரோ அஜித்தே அவரை பாராட்டி அவருக்கான முக்கியத்துவம் கொடுத்ததை மறக்க முடியாது. அண்மையில் அவரின் நடிப்பில் தடம் படம் வெளியானது.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் நல்ல வசூலையும் பெற்றது. அதனையடுத்து அவர் தெலுங்கில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஸ்டைலையும், உடற்கட்டழகையும் தொடர்ந்து பின்பற்றி வரும் அவர் டிவிட்டரில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு தடம் படத்திற்காக தன் அன்பை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.