Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விரைவில் அஜித்துடன் நடிப்பேன்: நண்பன் பட நடிகர் பேச்சு

நடிகர் விஜய் மற்றும் அஜித் இடையே தான் தமிழ் சினிமாவில் ஒரு போட்டி உள்ளது. நிஜத்தில் அவர்கள் அவரவர் படங்களில் கவனம் செலுத்திவந்தாலும், இவர்கள் இருவர் பற்றிய ஒப்பீடு தொடர்ந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில் நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த ஜீவா தற்போது அஜித்துடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

"விஜய், விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அஜித்துடன் விரைவில் நடிப்பேன்" என ஜீவா குறிப்பிட்டார். அஜித்துடன் எப்போது நடிப்பீர்களா என்கிற கேள்விக்கு தான் இப்படி பதில் அளித்துள்ளார்.