Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி தயாரிப்பாளரை ஏமாற்றிய தமிழ்நாட்டு விநியோகஸ்தர்! அதிர்ச்சி புகார்

இந்தியா முழுவதும் பெரிய ஹிட் ஆன படம் பாகுபலி. இதன் இரண்டாம் பாகத்தை தமிழில் கே ப்ரோடக்ஷன்ஸ் ராஜராஜன் என்பவர் வாங்கி வெளியிட்டார்.

52 கோடிக்கு தமிழக ரிலீஸ் உரிமையை கொடுத்துள்ளனர். படம் வெளியாகி நல்ல வசூல் ஈட்டிய நிலையில் தயாரிப்பாளருக்கு 17.6 கோடி ரூபாய் தராமல் பாக்கி வைத்துள்ளாராம் அவர். அதற்காக சென்ற வருடம் செக் கொடுத்துள்ளார் ராஜராஜன்.

ஆனால் அது கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது. அதனால் தற்போது கே ப்ரோடக்ஷன்ஸ் மீது சீவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இன்னும் ஒருவாரத்தில் பணம் செலுத்தவிலை என்றால் கே ப்ரோடுக்ஷன்ஸ் வங்கி கணக்கு முடக்கப்படும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.