Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரின் பட ஷூட்டிங்கில் சிலிண்டர் வெடித்து 8 வயது குழந்தை, பெண் பலி! அதிர்ச்சி புகைப்படங்கள்

சினிமா படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமின்றி கார் பறப்பது போன்ற காட்சிகளுக்கு மிக பாதுகாப்பான முறையில் கேஸ் சிலிண்டர்களை வெடிக்கவைத்து ஷூட் செய்வது வழக்கம்.

அப்படி கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் இவர்) நடித்துவரும் ரணம் படத்தின் ஷூட்டிங்கில் ஒரு கார் வெடிப்பு காட்சியை படமாக்கியபோது சிலிண்டர் வெடித்து காரின் பாகங்கள் பறந்து சென்று ஒரு குடும்பத்தின் மீது விழுந்துள்ளது. அதில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அயிரா என்கிற 8 வயது பெண் குழந்தையும் அதில் ஒருவர்.

இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படி ஷூட்டிங் செய்ய போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் முன் அனுமதி பெறவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் Bagaluru போலீஸ் நிலையம் அருகிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.