Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் நயன்தாராவின் இந்த படத்தை மறக்க முடியுமா! ஹிட் பாடல் இன்னும் நம் மனதில்

தனுஷ், நயன்தாரா இருவரும் இன்று சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்கள். இதே சில வருடங்களுக்கு முன் அவர்கள் நடிகர், நடிகை அவ்வளவு தான். இருவரும் ஜோடி சேர்ந்த படம் யாரடி நீ மோகினி. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த 2008 ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யுவன் இசை இப்படத்திற்கு கூடுதல் பக்கபலம். விண்மேகம் பெண்ணாக உருவானதோ, எங்கேயோ பார்த்த மேகம் ஆகிய பாடல்கள் இன்னும் முக்கியமான ஒன்று தான். காதல் ஸ்டோரியில் இது சற்று வித்தியாசமாக அமைந்தபடம். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தாக அமைந்தது.

ரகுவரனின் நடிப்பு, சரண்யாவின் எதார்த்தமான காதல், அதை தனுஷ் அணுகும் விதம், தனக்கு மனைவியாக வரப்போகிறவளை நண்பன் காதலிப்பது என ஃபிரேம் பை ஃபிரேம் அழகாக காண்பித்திருப்பார் இயக்குனர்.

செல்வராகவன் கதை எழுத வாசு, கீர்த்தி கேரக்டர்கள் வந்த தனுஷ், நயன்தாரா ஜோடி நடித்திருந்த காட்சிகள் இன்னும் நம் மனதில் நிற்கிறது. இப்படியான சிறப்புகளை கொண்ட இப்படம் தற்போது 11ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

#11YearsOfDhanushRaguvaraninYNM என்ற டேக்கில் இந்த மகிழ்ச்சியான விசயத்தை பதிவிட்டுள்ளனர்.