Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 கோடி சம்பளம் கொடுத்தும் ஜெயலலிதா படத்தை நிராகரித்த வித்யா பாலன்! சொன்ன காரணம் இதுதான்..

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துவருகிறார் நடிகை வித்யா பாலன். பாலிவுட் நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதலில்வாய்ப்பு அவருக்கு தான் சென்றதாம். ஆனால் அவர் முடியாது என மறுத்துவிட்டார்.

"நான் அடுத்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதனால் இதில் நடிக்க முடியாது" என்பது தான் அவர் சொன்ன காரணம்.

வித்யா பாலன் மறுத்தபிறகு தான் அந்த வாய்ப்பு நடிகை கங்கனாவிற்கு சென்றது. இதற்காக அவர் 24 கோடி ருபாய் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.