Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்டிப்பா தல கூட படம் இருக்கு! படத்தின் கதை பற்றிய கூறிய முக்கிய நடிகர்

அஜித் அண்மையில் தான் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்தார். 40 நாட்களுக்குள் இப்படம் எடுத்து முடித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணியில் தான் அஜித் நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வருகிறது.

அஜித் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது.

இப்படத்தில் வைபவ், பிரேம் ஜி அமரன் ஆகியோரும் நடித்திருந்தனர். மீண்டும் இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் படம் குறித்த நேர்காணலில் கலந்து வைபவ், பிரேம் ஜி இருவரும் கலந்துகொண்டனர்.

இதில் எங்க Team க்கு தல அஜித் கூட ஒரு படம் இருக்கு! அது மங்காத்தா-2 இல்ல Fresh Scriptஆ கூட இருக்கலாம், ஆனால் கண்டிப்பா தல கூட படம் இருக்கு என பிரேம் ஜி கூறியுள்ளார்.