Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் முன்னணி நடிகருடன் மோதல்? கடாரம் கொண்டான் பற்றி பரவும் தகவல்

நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக சாமி ஸ்கொயர் படம் தான் வெளியானது. அதற்கு பிறகு அவர் நடித்துவரும் துருவ நட்சத்திரம் மற்றும் கடாரம் கொண்டான் ஆகிய படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் தற்போது கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது என போஸ்டர் உலா வருகிறது. அதே நாளில் தான் சூர்யாவின் NGK படமும் ரிலீஸ் ஆகிறது.

அதனால் பாக்ஸ்ஆபிஸில் பெரிய மோதல் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அந்த போஸ்டர் உண்மையில்லை என படக்குழு கூறியுள்ளது.

இன்னும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடியவில்லை. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.