Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

12 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை தபுவின் அதிரடி! பிரபல நடிகர், இயக்குனருடன் மாஸ் கூட்டணி

நடிகை தபு காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர். இப்படம் இன்றும் நண்பர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. அப்படத்தின் முஸ்தபா பாடல் காலத்தால் அழியாத பாடல் ஒன்று.

அதன் பின் இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தெலுங்கில் கடந்த 2007 க்கு பிறகு அவர் அங்கே நடிக்கவில்லை.

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த அவர் மீண்டும் தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் அடுத்த மாதம் இணைகிறாராம். இதன் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அவருக்கு அம்மா ரோல் தானாம்.