Game of Thrones GOT ஆங்கில தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அந்த சீரிஸ்க்கு எண்ணிலடங்கா ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் 8 வது சீசன் முதல் எபிசோடு இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் உலகளவில் முதலிடம் பெற்றுள்ளது.
1191 ல் அமெரிக்காவின் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை மையமாக கொண்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் உருவாக்கப்பட்டது. இதன் முதல் எபிசோடு கடந்த 2011 ல் வெளியானது.
நல்ல வரவேற்புடன் அடுத்தடுத்து 7 சீசன்களை வெளியானது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள் கொண்டது. தற்போது இந்த தொடரின் இறுதி சீசன் வெளியாகியுள்ளது. இதற்காக ஒருவருடமாக ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
டிவிட்டரில் #GameofThrones என் முதலிடத்தை பிடித்தது. மேலும் இதில் வரும் கதாபாத்திரங்கள் கூட டிரெண்டாகிவிட்டன.