Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 படத்தை தொடர்ந்து ரஹ்மான் வெளியிட்ட எதிர்பாராத அதிரடி! பிரம்மாண்ட வரவேற்பு

விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அப்படி ஒரு பொருத்தமாகிவிட்டது. உதயா, அழகிய தமிழ் மகன் படத்தில் இவர்கள் கூட்டணி தொடங்கியது. அதன் பின் பல வருடங்கள் கழித்து மெர்சல் படத்தில் இந்த கூட்டணி உச்சம் பெற்றது என சொல்லலாம். ஆளாப்போறான் தமிழன் பாடல் அப்படியான ஒரு பெருமையை கொடுத்தது. அதன் பின் கடந்த ஆண்டு வந்த சர்கார், தற்போது விஜய் 63 என அடுத்தடுத்து தொடர்ந்து அமைந்து வருகிறது.

ரஹ்மான் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர். ஆஸ்கர் விருது பெற்ற இவர் பக்தி பாடல்களுக்கு இசையமைக்காமாட்டார் என சொல்லப்பட்டு வந்தது. அதை தற்போது பிரேக் செய்துவிட்டார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சீரடி சாய்பாபா பாடலை எழுதி, இசையமைத்து பாடி ஆல்பம் வெளியிட்டுள்ளாராம். இது பாபா பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தமிழ் புத்தாண்டை சாய்பாபாவுடன் கொண்டாடுங்கள் என அவர் கூறியுள்ளார்.