நடிகை சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். தெலுங்கில் ஃபிடா அவருக்கு சிறப்பாக அமைந்தது. பாடலும் ஹிட்.
அதே போல தமிழில் தனுஷுடன் நடித்த மாரி 2 சூப்பர் ஹிட்டாக ரவுடு பேபி பாடல் விரைவில் 400 மில்லியன் பார்வைகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடலில் அவர் செம ஆட்டம் போட்டதை மறக்க மாட்டீர்கள்.
மலையாளத்தில் பிரபல நடிகர் ஃபாஹத் பாசிலுடன் ஜோடியாக நடித்துள்ள அதிரன் படம் கடந்த ஏப்ரல் 12 ல் மலையாளத்தில் வெளியானது.
நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மறுநாள் வரும் ஏப்ரல் 19 ல் கேரளாவின் வெளி பகுதிகளில் வெளியாகவுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் 50 க்கும் அதிகமான தியேட்டர்களில் நாளையே வெளியாகவுள்ளதாம்.