கிரிக்கெட் விசயத்தில் சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு! சூப்பரான செயல் - குஷியான வீரர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான படத்தை கொடுக்க கூடிய நடிகர் என்ற பேச்சு இருந்து வருகிறது. அவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அடுத்ததாக அவரின் மிஸ்டர் லோக்கல் படம் மே 1 ம் தேதி வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் இறங்கிவிட்டார். கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் ரியோ நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.
அவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்துகொண்டதை பார்த்திருப்பீர்கள்.
இந்நிலையில் அவர் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடனும், திறமையுடனும் இருப்பவர்களை ஊக்குவிக்கும் செயலில் இறங்கியுள்ளார்.