Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டியின் போராட்டத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு! பாலியல் பிரச்சனையில் வெளியான அதிரடியான முடிவு

ஸ்ரீ ரெட்டி யார் என தெரியாதவர்களே இருக்க முடியாது. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் கடந்த வருடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கினார்.

அதிரடியாக பல விசயங்களை செய்து வந்த அவர் ஃபேஸ்புக் மூலம் பல அதிரடிகளை கொடுத்து வந்தார். அவரால் பல பேர் சிக்கினர். இந்நிலையில் அவரின் கோரிக்கைக்கு ஆந்திர அரசு தீர்வு கொடுத்துள்ளது.

இதன்படி தெலுங்கானாவில் elangana State Film Development Corporation Chairman ராமமோகன் ராவ் தலைமையில் ஒரு குழு அமைத்து நடிகைகளுக்கான பிரச்சனையை தீர்க்க மையம் அமைத்துள்ளது. இக்குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குனர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கு ஸ்ரீரெட்டி ஒரு ஹைதராபாத்தை சேர்ந்தவளாக எனக்கு இன்று பெருமையாக இருக்கிறது. அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.