Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் படத்தின் முக்கிய காட்சிக்காக எடுத்து வரப்பட்ட விலையுயர்ந்த பிரம்மாண்ட பொருள்!

விஷாலை வைத்து இயக்குனர் மிஸ்கின் ஹிட்டான துப்பறிவாளன் 2 படத்தை இவ்வருடத்தின் அரை இறுதியில் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

விஷால் ஒரு பக்கம் கல்யாண மாப்பிள்ளையாகிவிட்டார். நடிகர் சங்க கட்டிடம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அங்கு தான் அவர் சொன்னது போல நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷ்ன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் துருக்கி நாட்டில் எடுக்கப்பட்டு வந்தது.

இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்காக விலையுயர்ந்த பிரம்மாண்ட Boeing 757-200 ரக விமானத்தை பயன்படுத்துகிறார்கள். ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள் இதில் எடுக்கப்படுகிறதாம்.