Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமீபத்தில் ஹிட்டான தெலுங்கு படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். மேலும் இயக்குனராக அவரின் இரண்டாவது படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. ஆனால் பின்னர் கைவிடப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தற்போது தனுஷ் மஜிலி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். சமந்தா மட்டும் அவரது கணவர் நாக சைதன்யா நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.

தனுஷ் தற்போது நடித்துவரும் படங்களை முடித்தபிறகு மஜிலி ரீமேக்கில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.