Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63 படத்துக்கு தடை வேண்டும்! புதிய வழக்கு

விஜய் படம் நடிக்கிறார் என்றாலே அதற்கு பிரச்சனைகளும் முதல் நாளில் இருந்தே வரிசைகட்டி நிற்கும். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி63 படமும் அப்படிதான்.

இந்த படத்தின் கதை என்னுடையது, ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கவேண்டும் என கூறி குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் பதிவு செய்துள்ள வழக்கில் "நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதி சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கூறினேன். அதை வைத்துதான் அட்லீ இப்படி பெண்கள் கால்பந்து கதையை படமாக்கி வருகிறார். எனவே படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.