Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Mr லோக்கல் தள்ளிப்போக உண்மையான காரணம் இதுதான்? சிவகார்த்திகேயனுக்கே இந்த நிலைமையா..

சிவகார்திக்கியேன் மற்றும் நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் முதலில் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் அது பின்னர் 18ம் தேதிக்கு தள்ளிப்போனது.

தியேட்டர் கிடைக்காததால் தான் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர் என கூறப்படுகிறது. ஏப்ரல் 26ம் தேதி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் திரைக்கு வருகிறது. அதற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.

மேலும் காஞ்சனா 3 படமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு பல தியேட்டர்கள் மூன்று வாரங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்த இரண்டு காரணங்களால் Mr.லோக்கல் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் தான் ரிலீஸ் தேதியினை மாற்றியுள்ளனர்.