Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையதளத்தில் லீக்கான காஞ்சனா 3 படம்! வசூலுக்கு வந்த சோதனை - படக்குழு அதிர்ச்சி

ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி, தயாரித்த காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 வெளிவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் முதல் நாளே ரூ 10 கோடி வசூலை அள்ளியது.

மூன்று நாட்கள் ரூ 60 கோடி வசூலை அள்ளி விஜய், அஜித் படங்களுக்கு இணையாக இப்படம் வசூலை அள்ளி வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

படம் நல்ல வசூல் சாதனை செய்துகொண்டிருக்கும் நிலையில் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைரசியை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.