Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதித்ய வர்மா ஷூட்டிங்! மகனுக்காக நேரடியாக களத்தில் இறங்கிய விக்ரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகம் ஆகும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் வர்மா படம் பெரிய சர்ச்சையில் சிக்கியது. பாலா இயக்கிய படத்தை அப்படியே தூக்கி போட்டுவிட்டு தற்போது ஆதித்ய வர்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கி வருகின்றனர்.

தற்போது ஷூட்டிங் போர்ச்சுகள் நாட்டில் நடந்து வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கிரிசையா தான் இயக்கி வருகிறார்.

ஆனால் தற்போது விக்ரம் தன் மகனுக்காக நேரடியாக களத்தில் இறங்கி தானே இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் கிரிசையா பெயருக்கு மட்டும் இயக்குனராக போட்டுவிட்டு, விக்ரமே நேரடியாக இயக்குகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.