Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவியின் காமெடி பிரபலங்கள் பிரபல நடிகரின் மகளுடன்! சூப்பர் கூட்டணியின் சாதனை இதோ

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் ஒரு சானல் விஜய் டிவி. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர், பங்கேற்ற போட்டியாளர்கள் என பிரபல மாகிவிட்டார்கள்.

இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தீனா, பழனி மற்றும் சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். ஏற்கனவே பா.பாண்டி படத்தின் மூலம் தீனா சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார்.

அதில் 4 பேர் தற்போது தும்பா படத்தில் இணைந்துள்ளார்கள். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த கனா படத்தில் ஹீரோவாக அறிமுகமான தர்ஷன் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க ஹரிஸ் ராம் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

ஒரு நாளைக்குள் இந்த டிரைலர் 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 28 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.