Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா ஹிந்தி ரீமேக்! சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் முன்னணி பாலிவுட் நட்சத்திரம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஹிட் ஆன காஞ்சனா படம் வெளியாகி 8 வருடங்கள் கழித்து தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் லாரன்ஸ் ரோலில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். லாரன்ஸே இதை இயக்குகிறார்.

மேலும் காஞ்சனா படத்தில் திருநங்கை ரோலில் நடிகர் சரத்குமார் நடித்திருந்த நிலையில், ரீமேக்கில் அந்த ரோலில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அக்ஷய்க்காக லாரன்ஸ் கதையில் சில மாற்றங்கள் செய்து படத்திற்கு லட்சுமி என பெயர் வைத்துள்ளார். நடிகை கியாரா அத்வாணி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.