Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை! அப்போ முதலிடத்தில் யார்! போடு வெடிய

கடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த இப்படம் பெரும் அரசியல் சர்ச்சைகள், நீதிமன்றத்தில் கதை பிரச்சனை என பல சிக்கல்களை சந்தித்தது.

உலகளவில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ 250 கோடிகளை தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்தது. படத்தில் அரசை எதிர்க்கும் படியான வசனங்கள், அரசு வழங்கிய இலவச பொருட்களை தூக்கி எறிவது, ஜெயலலிதாவை குறிக்கும் கோமளவள்ளி என்ற பெயர் ஆகிய விசயங்கள் சர்ச்சைகளாகின.

மேலும் விவேக் எழுதிய சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி ஆகிய பாடல் பெரும் சாதனை செய்தது. ரஹ்மான் இசையில் வந்த இப்பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இப்படம் டிவி இம்பிரஷன்களில் அதிகமான பார்வைகளை பெற்று டாப் 3 லிஸ்டில் வந்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் முதல் இடத்திலும், பாகுபலி 2 படம் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து சர்கார் படம் 1,69,06,000 இம்பிரஸன்ஸ் பெற்றும் மூன்றால் இடத்திலும் உள்ளது,

Barc South Movies Top3

#Pichaikkaran - 17696000

#Baahubali2 - 17070000

#Sarkar - 16906000