Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா சீரியல் என கலக்கிய பழம்பெரும் நடிகை 20 வயது பேரழகியாக மாற்றிய படம்! மிரட்டல் லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சச்சு. அப்போதைய பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜியின் படங்களில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு வயது 60 ஐ கடந்துவிட்டது.

1950 களில் தொடங்கி பல முக்கிய வசூல் சாதனை செய்த படங்களில் நடித்தவர் 2016 ல் சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் படத்துடன் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

ஜெயலலிதாவின் கையால் கலைமாமணி விருது வாங்கியவர் பின்னர் டிவி சானலில் முக்கிய சீரியலான நந்தினி சீரியலில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் விஜயன் சி இயக்கும் பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தில் நடித்து வருகிறார்.

சயின்ஸ் பிக்‌ஷன் படமான இக்கதையில் சச்சு நடிகை ஷில்பாவின் பாட்டியாக நடித்துள்ளார். மேலும் முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் எனஆசை.

அரண்மனை வைத்தியர்கள் மூலம் ஒரு மருந்து கண்டு பிடிக்கிறார். பல வருடங்கள் கழித்து அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. அந்நிறுவனத்தை அணுகிய சச்சு தன்னை இளமையாக மாற்றி பேத்தி போல மாறிவிடுகிறார். இது தான் ஷில்பா ஷெட்டி என இயக்குனர் கூறுகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் இதோ..