Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போராளியாக களத்தில் இறங்கிய பிரபல நடிகை நமீதா! அவருக்கும் அரசியல் வாதிக்கும் நடக்கும் யுத்தம்!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நமீதா. பல படங்களில் நடித்து வந்தவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. இத்தனைக்கும் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்டவர் மீண்டும் பிரபலமானார். நிகழ்ச்சி முடிந்ததும் தான் காதலித்து வந்த சினிமா பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அகம்பாவம் என்னும் படத்தில் அவர் சமூக போராளியாக நடித்து வருகிறார். இப்படத்தில் வினோத், சமீரா சாய் ஜோடி நடிக்க மனோபாலா, அப்புக்குட்டி, ஜாக்குவார் தங்கம், பாண்டிராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சென்னையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஏற்காடு பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது.