Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரியின் அதிரடி அறிக்கை! விஷால் தரப்பு அதிர்ச்சி

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு சிறப்பு அதிகாரியாக சேகர் என்பவரை நியமித்து அண்மையில் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த அணி அதிருப்தி அடைந்தது. மேலும் விஷால் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அது இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அதை நீதிமன்றம் அரசின் நடவடிக்கைமீது தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகளால் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என சிறப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பலகையில் வெளியாகியுள்ளது.