Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

70 நாள் கடந்த ஷூட்டிங்.. அப்டேட் எப்போது? தளபதி63 பற்றி வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தற்போது தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் பல இடங்களில் நடந்து வந்தது. தற்போது கால்பந்து மைதான செட் போட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

மேலும் படத்தில் ஷாருக்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் சமீபத்தில் பரவியது.

இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. "தொடர்ந்து 70 நாட்களாக நடந்து வருகிறது ஷூட்டிங். தற்போது நான்காவது செடியூல் துவங்கியுள்ளது. படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்" என கூறியுள்ளனர்.

கதை திருட்டு என வழக்கு, தளபதி63 பழைய செட்டில் தீ விபத்து உட்பட பல செய்திகள் கடந்த வாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.