Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையின் மகள் இப்போது திரிஷாவின் மகளாகிவிட்டார்! மிரட்டலான லுக் - ஸ்பெஷல் ரிலீஸ்

நடிகை திரிஷா எப்போதும் தனக்கென ஒரு தனி இடத்தை சினிமாவில் பிடித்து வைத்துள்ளார். பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்த ஆண்டில் வெளியான பேட்ட படம் மூலம் நிறைவேறிவிட்டது.

அவர் தற்போது ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், பேய் படங்களிலும் நடித்து வரும் அவர் பரமபத விளையாட்டு என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

கே.திருஞானம் இயக்கியுள்ள இப்படம் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக திரிஷா தன் டிவிட்டர் பக்கம் மூலம் கூறியுள்ளார். பின்னர் சில மணி நேரத்திலேயே டிரைலரும் வெளியாகிவிட்டது. இதிலும் ஒரு அதிரடியான திரிஷாவை நடிப்பின் மூலம் பார்க்கலாம் என்று தெரிகிறது.

மேலும் இதில் கடந்த வருடம் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து கலக்கியவர். இவர் இப்படத்தில் பேசிய மிரட்டலான வசனத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே.

அத்துடன் மானஸ்வி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.