Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட ரிலீஸ் நாளில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய மரணம் சம்பவம்! பிரபல நடிகர் மகேஷ் பாபு சோகம்

தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. அங்கி அவரை சூப்பர் ஸ்டார் என அனைவரும் கொண்டாடுவார்கள். அவருக்கு பெரும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் அவரின் மகரிஷி படம் இன்று வெளியாகியுள்ளது. இது அவரின் 25 வது படம் என்பதால் இன்னும் பெரிய கொண்டாட்டம் தான்.

இப்படத்திற்காக தவ்லீஸ்வரம் பகுதியில் உள்ள முரளி கிருஷ்ணா தியேட்டர் கட்டிடத்தில் கட்டவுட் வைக்கும் பணியில் ஈடுபட்ட ராஜிவ் என்ற 27 வயது இளைஞர் மின்சாரம் தாக்கியதில் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

கோமா நிலையில் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அந்த இளைஞர் இறந்துள்ளார். இந்த செய்தி பரவ மகேஷ் பாபு மற்றும் அவரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.