Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சம்பளமே இல்லாமல் வேலை செய்கிறேன்: ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர்

படங்களை விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனங்களை பார்த்து கோபமாகி போலீசில் புகார் அளித்த தயாரிப்பாளர்களும் உண்டு.

அப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கும் முதல் படம் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுங்கள், சம்பளம் இல்லாமல் கூட வேலை செய்கிறேன் என பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமாக விஜய் மில்டன் கேட்டுள்ளார்.

"மாறன்sir படம் இயக்கவிருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதிவாளராகவோ,உதவி இயக்குனராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன்.கற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுவதால் wil work even without any professional fees🙏🏻" என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.