Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் கதையை திருடி.. என்னையே நடிக்க வைத்தனர்: அயோக்யா பற்றி பார்த்திபன் அதிர்ச்சி குற்றச்சாட்டு

நேற்று தியேட்டர்களில் வெளியான அயோக்யா படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கில் ஹிட் ஆன டெம்பர் படத்தினை தான் அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். விஷால் ஹீரோவாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை உண்மையில் 1994ல் வெளியான ஜினல் ஜினல் ஒரிஜினல் படத்தின் கதையை திருடிதான் எடுத்துள்ளனர். அதில் என்னையே நடிக்க வைத்துள்ளனர் என நடிகர் பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார்.

"அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்" என பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.