Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முக்கிய பட பிரபலங்கள்! மாஸ் பிளான்

பிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலை முறைகள் பலராலும் பார்க்கப்படும் ஒன்று. ஹிந்தியில் 12 சீசன்களை கடந்துவிட்ட இந்நிகழ்ச்சி விரைவில் தமிழ், தெலுங்கில் 3 ம் சீசனை எட்டவுள்ளது.

தெலுங்கில் இம்முறை நடிகர் நாகார்ஜூனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அவர், நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டியின் படம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்காக சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போடப்பட்ட செட் அண்மையில் தீப்பிடித்து சேதமானது.

இதனால் தற்போது அப்படக்குழு பிக்பாஸ் வீட்டில் ஷூட்டிங் செய்கிறார்கள். இதற்காக பிக்பாஸ் செட்டில் சிறிது மாற்றம் செய்திருக்கிறார்களாம்.