Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைய தளபதி விஜய் போல என் பிள்ளை வரவேண்டும்! சொல்லி வளர்த்த பிரபல நடிகரின் அப்பா

விஜய் தற்போது பலராலும் கொண்டாடப்படும் அளவிற்கு பெரும் இடத்தில் இருக்கிறார். அவருக்கான வரவேற்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அவரின் படங்கள் ரிலீஸின் போது தியேட்டர் வாசல் சொல்லும்.

அவரை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். மிக அதிகமாக அவர் நேசிக்கிறார்கள் என்பதை சமூகவலைதளங்கள் காட்டுகின்றன. சினிமா பிரபலங்களும் அவருக்கு ரசிகராக இருக்கிறார்கள்.

அதில் நடிகர் ஜீவாவுக்கு விஜய்யை மிகவும் பிடிக்குமாம். அவரின் அப்பா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி என் மகன் இளைய தளபதி விஜய் போல என் பிள்ளை வரவேண்டும் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம்.

ஒரு நிகழ்ச்சியில் இதை ஜீவாவே கூறியுள்ளார். ஜீவா விஜய்யுடன் நண்பன் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.