Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுக்க பெரும் வசூலை அள்ளி சாதனை படைத்த முக்கிய படம்!

சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள பலரும் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் பிரபல நடிகர்களின் படங்கள் என்றால் அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.

மலையாள படங்களுக்கும் உலகளவில் சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் அண்மையில் லுசிஃபர் படம் வெளியானது.

நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரனின் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது உலகம் முழுக்க இப்படம் ரூ 200 கோடி வசூலை கடந்துவிட்டதாம்.