Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி64ல் விஜய்யின் ரோல் இதுதான்! தயாரிப்பாளர் இவரா? பரவும் புதிய தகவல்

நடிகர் விஜய் இன்னும் தளபதி63 படத்தின் ஷூட்டிங்கையே முடிக்கவில்லை. தற்போது அவரது அடுத்த படம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகிறது.

மாநகரம் படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜ் என்ற இளம் இயக்குனர் விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பார் என்று தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

மேலும் இந்த படத்தினை ரசிகன், தேவா போன்ற படங்களை தயாரித்த பிரிட்டோ என்கிற தயாரிப்பாளர் தான் தயாரிக்கிறார் என்று மற்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் தமிழ் சினிமா துறையில் ஹாட்டாக உலா வருகிறது.

இவர் விஜய் குடுப்பத்தின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.