Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

RRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி! புது பெயர் இதுவா?

பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட பட்ஜெட்டில் RRR என்கிற படத்தினை இயக்கி வருகிறார். அதில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

RRR என்பதை விரிவாக்கி இதற்கு ரகுபதி ராகவா ராஜாராம் என பெயர் வைக்க முடிவெடுத்துள்ளனர் என தகவல் பரவி வருகிறது. சுதந்திர போராட்டம் பற்றிய படம் இது என்பதால் இந்த தலைப்பு சரியாக இருக்கும் என இயக்குனர்நினைத்துள்ளார் .

ஜூலை 30, 2020ல் படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது.